கால்சியம் எலும்பிற்கு முக்கிய தேவை. உணவில் உள்ள கால்சியத்தை உடல் தக்கவைத்து கொள்ள,வைட்டமின் டி அத்தியாவசியம், வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்து கொள்ளும் கால்சியம் உணவுகளை, உடல் ஏற்காது.அதேபோல் வைட்டமின் பி 12,எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உருதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை.ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை, எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவை.எலும்பின் வளர்ச்சி, வலிமை கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவற்றை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரா சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன் தாதூக்களும் நமக்கு முக்கியமானவை.
